×

சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர்த்திருவிழா நாளை நடக்கிறது

செந்துறை, மே 21: செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன், மாரியம்மன்  கோவில் தேர் திருவிழா நாளை  நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் செல்லியம்மன், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13ம்தேதி இரவு ஐயனார் காப்பு கட்டுதலுடன் துவங்கி, 14 ம்தேதி செல்லியம்மன், மாரியம்மன் விநாயகருக்கு காப்பு கட்டி திருவிழா துவங்கியது. அன்று முதல் காலை மாலை இரு வேளையும் செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய், பூ, பழம், மாவிளக்கு மற்றும் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை வைத்து படையலிட்டனர். இதனால் விளைச்சல் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்பது பண்டையகால நம்பிக்கை. மேலும் நேற்று மாதிரி தேரோட்டம் நடைபெற்றது. நாளை(22ம்தேதி) காலை ஒன்பது மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு மாலை அதன் சன்னதியை வந்தடையும், இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இளகஞர்கள் செய்துள்ளனர்.நாளை மருநாள் மஞ்சள் விளையாட்டுடன் விழா நிறைவு பெறும்.

Tags : Tirur Tiraiyagai ,
× RELATED உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளி 10ம்...